100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கும் ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு !!

கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முக்கியத் திட்டமான 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் அல்லது 100 நாள் வேலை
உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு கூலியாக குறைந்தபட்சம் 170 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைத்தோ, அதிகமாகவோ வழங்கப்பட்டு வருகிறது.
 இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 12 இலக்க அடையாள எண் அல்லது தற்போது பயன்படுத்தி வரும் வேறு வகையான அரசு அடையாள அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஏற்கனவே, சமையல் எரிவாயு மானியம், முதியோர் ஓய்வுத்தொகை உள்பட பல திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...