2000 ரூபாயில் ஸ்மார்ட்போன்!!!!

உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகளில் போதுமான தொகை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதை சமாளிக்க கிரெடிட், டெபிட் கார்டு, மொபைல் வாலெட் போன்ற டிஜிட்டல்
பரிவர்த்தனையை மக்களை அதிகளவில் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.


மேலும், மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனையை உபயோகிக்க வேண்டி பரிசுகளையும் அறிவித்துள்ளது. ஆனால், மொபைல் வாலெட் பயன்படுத்த ஸ்மார்ட்போன் அவசியமாகும். எனவே, அனைவரும் ஸ்மார்ட்போன் வாங்கும் வகையில் ரூ.2,000 விலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க வேண்டும் என உள்நாட்டு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் நிதி ஆயோக் சார்பில் நடந்த கூட்டத்தில் இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், சீன நிறுவனங்களிடம் இந்த கோரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை. இந்த குறைந்த விலை போன்களில் ஆதார் கார்டு மூலம் செய்யும் பரிவர்த்தனைக்கு கை ரேகை ஸ்கேன், உயர் தர பிராசஸர் ஆகியவையும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...