தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டுகிற நிலை உருவாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது. 2011–ம் ஆண்டு, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் ஜல்லிக்கட்டு காளைகளை அப்போதைய மன்மோகன் சிங் அரசு சேர்த்தது. தொடர்ந்து 2014–ம் ஆண்டு,
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதன்காரணமாக 2015–ம் ஆண்டு, ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டது. அதை ‘பீட்டா’ அமைப்பு எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதையடுத்து மத்திய அரசின் அறிவிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்ற உத்வேகம் தமிழர்களிடையே ஏற்பட்டது. இதில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்ததால், பெரிய அளவில் எழுச்சி போராட்டம் வெடித்தது. எனவே அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு பரிசீலித்தது. டெல்லியில் பிரதமர் மோடியை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக வந்து விடக்கூடாது என கருதி, ஒரு வாரம் தீர்ப்பை வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு முறையிட்டது. அது ஏற்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்து நேற்று முன்தினம் (21–ந் தேதி) தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. ஆனாலும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கும் வகையில் சட்டம் வேண்டும் என்று கூறி, போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்ள மறுத்து விட்டனர். இந்த நிலையில் அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டை நாடி தடை உத்தரவு பெற்றுவிடக்கூடாது; அப்படி நேரிட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும்; எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலாகி விடும்.
எனவே தமிழக அரசு இதில் மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறது. அதற்கு ஏற்ற விதத்தில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை தமிழக அரசின் வக்கீல் யோகேஷ் கன்னா நேற்று உறுதி செய்தார். அந்த மனுவில், ‘‘ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும், அதில் எங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது’’ என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி வக்கீல் யோகேஷ் கன்னா கூறுகையில், ‘‘சுப்ரீம் கோர்ட்டில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். அதில் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டால், அதில் தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என கூறி உள்ளோம்’’ என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 69 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.