மின்னணு பண பரிவர்த்தனைக்கு தனி அமைப்பு: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு!!

மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை கண்­கா­ணிக்க, தனி அமைப்பை ஏற்­ப­டுத்­தும் மத்­திய அர­சின் திட்­டத்­திற்கு, ரிசர்வ் வங்கி எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.
மத்­திய அரசு, ‘டிஜிட்­டல் பேமென்ட்’ எனப்­படும், மின்­னணு முறை­யி­லான பணப் பரி­வர்த்­த­னை­களை ஊக்­கு­வித்து வரு­கிறது.இந்­நி­லை­யில், மின்­னணு பரி­வர்த்­த­னை­கள் குறித்து ஆய்வு செய்ய
அமைக்­கப்­பட்ட, ரத்­தன் வாட்­டாள் தலை­மை­யி­லான குழு, மத்­திய நிதி­­ அமைச்­சர் அருண் ஜெட்­லி­யி­டம், தன் பரிந்­து­ரை­களை வழங்­கி­யுள்­ளது.அதில், தனிப்­பட்ட கட்­டுப்­பாட்டு அமைப்­பின் கீழா­கவோ அல்­லது ரிசர்வ் வங்­கி­யின் கீழ் உள்ள, பி.பி.எஸ்.எஸ்., அமைப்­பிற்கு கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கியோ, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை கண்­கா­ணிக்­க­லாம் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இதற்கு, ரிசர்வ் வங்கி கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.
இது குறித்து, மத்­திய அரசு உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மின்­னணு பரி­வர்த்­தனை தொடர்­பாக, ரிசர்வ் வங்கி, வாட்­டாள் குழு­வி­டம் அறிக்கை ஒன்றை அளித்­துள்­ளது. அதில், நிதிச் சந்­தை­யில் பணப்­பு­ழக்­கத்தை குறைக்­க­வும், அதி­க­ரிக்­க­வும், தனக்­குள்ள பொறுப்பை எடுத்­துக் கூறி, அத­னால், ஒட்­டு­மொத்த பணப் பரி­வர்த்­த­னை­களை கையா­ளும் அதி­கா­ரம், தன்­னி­டமே இருக்க வேண்­டும் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­து உள்­ளது. ரிசர்வ் வங்கி சட்­டம், வங்கி மற்­றும் வாடிக்­கை­யா­ளர் நலனை கருத்­தில் கொண்டு, ரொக்­கப் பயன்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.
மின்­னணு முறை­யில், வங்­கியின் துணை­யின்­றி­யும் பணப் பட்­டு­வாடா மேற்­கொள்­ள­லாம் என்­ப­தால், மின்­னணு பரி­வர்த்­த­னைக்கு என, தனி சட்ட அதி­கா­ரம் உள்ள கண்­கா­ணிப்பு அமைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தில், மத்­திய அரசு உறு­தி­யாக உள்­ளது. ரிசர்வ் வங்கி, வங்­கி­களின் முன்­னேற்­றத்­தில் தான் ஆர்­வம் காட்­டும் என்­ப­தால், மின்­னணு பணப் பட்­டு­வாடா சேவை நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்கு, தனி அமைப்பு ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என­வும், அரசு கரு­து­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...