கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அடுத்த நடவடிக்கையாக, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக் கணக்குகளையும், சோதனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கறுப்புப் பணத்தை தானே முன் வந்து அறிவிக் கும் வகையில், இரண்டு திட்டங்களை, 2016ல் மத்திய அரசு
அறிவித்தது. முதல் திட்டத்தின் மூலம், 65 ஆயிரத்து, 250 கோடி ரூபாய், வெள்ளை ஆனது. இரண்டாவது திட்டத்தின்கீழ், கறுப்புப் பணம் வெளியான விபரம் தெரிவிக்கப்பட வில்லை.
இந்த நிலையில்,கறுப்பு பணம் பதுக்கலை தடுக்கும் நோக்கில், ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக் கணக்குகளையும் சோதனையிட, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்ட தொடரில், வருமான வரி சட்டத்தில், திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப் படும் என, வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து, வருமான வரித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பழைய கணக்குகளை ஆய்வு செய்வதற்கு வசதி யாக, வருமான வரித்துறை சட்டத்தில் அரசு திருத் தம் கொண்டு வர உள்ளது.மேலும், கைப்பற்றப்படும் பணம், சொத்துக்கு, நடப்பு ஆண்டில் உள்ள மதிப்பு
போடப்பட்டு, அதற்கேற்ப அபராதம் விதிக்கப் படும். கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், சட்ட விரோதமாக வாங்கப்பட்டிருந்த சொத்தாக இருந்தாலும், அதற்கு இப்போதுள்ள நிலைக்கு ஏற்ப விலை மதிப்பிடப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.