புதிய மருத்துவர்கள் நியமனம்...எப்போது? மாநகராட்சியில் 71 பணியிடங்கள் காலி !!

சென்னை மாநகராட்சியில், 71 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இன்றி, நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

சென்னையின், 15 மண்டலங்களில், 138 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதைத் தவிர, மண்டலங்களுக்கு ஒன்று வீதம், படுக்கை வசதிகளுடன் கூடிய, இரண்டாம் நிலை மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.





மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், மண்டல சுகாதார அதிகாரிகள் என, மொத்தம், 268 மருத்துவர் பணியிடங்கள் மாநகராட்சியில் உள்ளன. ஆனால் தற்போது, 197 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்; காலி பணியிடங்கள், 71 ஆக உள்ளது.




ஆர்வம் இல்லை

இந்த பணியிடங்களை நிரப்புவதில், சென்னை மாநகராட்சி அக்கறை காட்டவில்லை. மேலும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய, மருத்துவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.




இதனால், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டு, மாநக ராட்சியால் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் அவர்கள், மாதம், 40 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த சம்பளத்திற்கு பணியாற்ற விருப்பமின்றி உள்ளனர்.




எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவர்கள், ஓராண்டு காலம் அரசு மருத்துவமனையில் பணி புரிந்தால், மருத்துவ மேல்படிப்புக்கான நுழைவுத் தேர்வில், 10 மதிப்பெண்கள், சிறப்பு மதிப்பெண்களாக கிடைக்கும். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிந்தால், இந்த மதிப்பெண் கிடைக்காது என்று கூறப்படுகிறது.




குறைவான சம்பளம்

இதனால் தான், எம்.பி.பி.எஸ்., படித்தவுடன், மாநகராட்சி மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், குறைவான சம்பளம் எனக் கருதி, ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும், மாநகராட்சி உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறையால், ஒரே மருத்துவர், இரண்டு சுகாதார நிலையங்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.




மருத்துவர்களை விரைவாக நியமிக்க, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





மருத்துவ பணியாளர்களும் இல்லை!

சென்னை மாநகராட்சி சுகாதார துறையில், பூச்சியியல் அதிகாரி, மலேரியா பணியாளர், சுகாதார ஆய்வாளர், கள உதவியாளர் என, அனைத்து மட்டத்திலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.




இதில், 1,500க்கும் அதிகமாக, மலேரியா பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. சுகாதார ஆய்வாளர்கள், 60 பேர் தேவை. நீதிமன்ற வழக்குகளால் இப்பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் உள்ளதால், மாநகராட்சி சுகாதார துறை செயலிழந்து நிற்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...