தேசிய கட்டுரை போட்டி:விருதுநகர் பள்ளி சாதனை !!

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் விருதுநகர் மாவட்ட சுந்தரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை தேசிய அளவில் சிறந்த கட்டுரையாக தேர்வாகியுள்ளது.இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மகாராஷ்டிரா மாநிலம் பூனம் மாவட்டம்

பாராமதி வி.பி.ஐ.ஐ.டி. கல்லுாரியில் நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கிராம சுந்தரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1வகுப்பு மாணவி கல்பனா தலைமையில் வெங்கடேஷ், அதே வகுப்பு முகமது கஸ்ஸாலி, தினேஷ் ராஜா, 9 ம் வகுப்பு சித்தி அப்லஹா, ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் 'உள்ளூர் காரீயப் பட்டறை கழிவுகளிலிருந்து காரீயத்தை தனிமைப்படுத்தி நுண்ணுயிர்களை பயன்படுத்தி உயிர்மாற்று'. எனும் தலைப்பில் கட்டுரையை சமர்ப்பித்தனர்.தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 15 கட்டுரைகளில் தமிழகத்தில் இருந்து இப்பள்ளி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சான்றிதழ், பதக்கங்கள், இளம்விஞ்ஞானி என்ற விருதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரசாத் ஜவடேகர் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பாராட்டினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...