ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து சென்னையில் திங்கட்கிழமையன்று 51 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. 200 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் பெரிய அளவில் நடந்தன.
ஐஸ்அவுஸ் காவல்நிலையம் பெட்ரோல் குண்டுவீசி தீ வைத்து கொளுத்தப்பட்டது. மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே போலீஸ் பூத் ஒன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பத்தில் நடந்த கலவரத்தில் மீன் மார்க்கெட், குடிசைகள் தீ வைத்து நாசப்படுத்தப்பட்டன. திருவல்லிக்கேணி பாரதி சாலையிலும் கார் ஒன்று எரிக்கப்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் வன்முறையாளர்கள் மீது 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தியதாக காவல்துறை துணை ஆணையர் சுதாகர் இதுகுறித்து கூறும் போது
ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய தீ வைப்பு சம்பவத்தில் 31 இருசக்கரவாகனங்கள் சேதம் அடைந்துள்ளது ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.