மாணவர்கள் மீதான போலீசாரின் வெறித்தனமான தாக்குதல் தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.*_
வரலாறு காணாத ஜல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர
வாகனங்களை தீக்கிரையாக்கியது போலீஸ்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.