தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை மறைந்த விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் ஜெ.கணேசன் தலைமையில், அரசு
ஊழியர்-ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பை சேர்ந்த ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. என்ஜிஓ சங்க மாநில தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தலைவர் கே.கணேசன் உள்ளிட்ட சுமார் 70 சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்னைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. இதுபற்றி பேச தமிழக முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் சங்க நிர்வாகிகளுக்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. வறட்சியின் காரணமாக இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.
மேலும் தமிழக அரசு 8வது ஊதியக்குழு அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை 20 சதவீதம் சம்பளத்தை கூடுதலாக இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும்...என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...