அதன் விவரம் பின்வருமாறு,
🔴 பத்து ஆண்டுகள் பணிமுடிந்து அடையும் தேர்வுநிலை (Selection Grade) அந்தஸ்து பெறும் ஆசிரியர்கள், கட்டாயம் தத்தம் 10, 12 மற்றும் Dted. கல்வித்தகுதிக்குரிய உண்மைத்தன்மைக்கான சான்றிதழ்களை பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெறாதவர்கள், இந்தாண்டு கடுமையாக பாதிக்கப்பட்டனர் என்பதை நமது பொறுப்பாளர்கள் தெளிவுபடுத்தினர். இதுகுறித்து பதிலளிக்கையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், தற்சமயம் அளிக்கப்படும் 10,12 மற்றும் Dted க்கான உண்மைத்தன்மைக்கான சான்றிதழை ஓரிரு மாதங்களில் பெற்றுத்தரக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.
தேர்வுத்துறை வாயிலாக உடனடியாக பெற்றுத்தந்து குறைகளை களைவதாக உறுதியளித்தார். ஆகையால், எவரேனும் தேர்வுநிலை அந்தஸ்து பெற இருப்பவர்கள், காலம் தாழ்த்தாமல் தத்தம் AEEO மூலம் உண்மைத்தன்மை சான்றிதழ் பெற விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.ஒரிரு மாதத்தில் உண்மைதன்மை வரவில்லையென்றால் SSTA இயக்கத்தின் சார்பில் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
🔴 தற்போது ஆசிரியர்கள் அனுபவிக்கும் CRC பயிற்சிக்கான ஈடுகட்டும் தற்செயல் விடுப்பு, SSTA வின் முயற்சியால் அடைந்தது நினைவிருக்கும். அதில், பல ஒன்றியங்களில் ஏதேனும் ஒரு சில காரணங்களால், CRC பயிற்சி வகுப்பிற்கு ஆசிரியர் எவரேனும் கலந்துகொள்ள இயலாமல் போயிருக்கலாம். அத்தகைய நாட்களில், ஆசிரியர்களின் 12 தற்செயல் விடுப்புகளில் இருந்து, ஒரு நாள் தற்செயல் விடுப்பை CL குறைப்பதாக புகார்கள் வந்தன. அது சம்மந்தமாக, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, இத்தகைய ஆணை எதுவும் அளிக்கப்படவில்லை. தான் விசாரித்து அத்தகைய குறைகள் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்வதாக பதிலளித்தார்.
🔴 நியாயமான கோரிக்கைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்று தெரிவித்த அலுவலரிடம் நாங்களும் நியாயமான காரணங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்ததுடன் மேலும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு நமது பொறுப்பாளர்கள் விடைபெற்றனர்...