வேலைவாய்ப்பு : குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணியிடங்கள்!

சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 64.

வயதுவரம்பு: 18 வயது முதல் 30 வரை.


பதவி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III

காலியிடங்கள்: 18

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் மேல்நிலை மற்றும் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பதவி: கணினி இயக்குபவர்

காலியிடங்கள்: 04

தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கணினி குறித்து பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800

பதவி: தட்டச்சர்

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் கீழ்நிலை அல்லது மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 08

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பதவி: நகல் சரிபார்ப்பவர்

காலியிடங்கள்: 02

பதவி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 01

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பதவி: ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர்

காலியிடங்கள்: 04

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம்

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000+ தர ஊதியம் ரூ.1650

பதவி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 13

தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10000 + தர ஊதியம் ரூ.1,300

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.01.2017

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி,

தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,

எழும்பூர் அல்லிகுளம் வளாகம், மூர்மார்க்கெட், சென்னை - 600 003 என்னும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களை http://ecourts.gov.in/sites/default/files/CMM_Notification.pdf என்னும் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...