ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்? - இன்று தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கிறது...??

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தற்போதைக்கு எதுவும் செய்ய இயலாது என்று, பிரதமர் கைவிரித்துவிட்டார். அதேநேரத்தில், அவசரச் சட்டத்தை மாநில அரசே இயற்றினால், அதற்கு எந்த வகையில் எல்லாம் உதவ

முடியுமோ அதை செய்யத் தயாராக இருப்பதாக, முதல்வரிடம், பிரதமர் நம்பிக்கை தெரிவித்ததாக, டெல்லி வட்டார தகவல்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அது நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்காக பார்க்கப்படும் என்றும், முதல்வரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால்தான், இன்று மாலையே சென்னை திரும்பவிருந்த முதல்வரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. வெளிநாடு சென்றிருக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நாளை டெல்லி திரும்புகிறார். அவரிடம் நேரம் கேட்கப்பட்டிருப்பதாகவும், அநேகமாக நாளை மறுநாள் குடியரசுத்தலைவரை முதல்வர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக, சட்ட வல்லுநர்களுடன் அவசரச் சட்டம் இயற்றுவது குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறராம். இதனால் மாநில அரசுக்கு ஏற்படக் கூடிய சாதக, பாதகங்கள் குறித்தும், உச்சநீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ளக் கூடிய விளைவுகள் குறித்தும் விரிவாக ஆலோசித்துள்ளாராம். மாநில அரசே அவசரச் சட்டம் கொண்டுவந்தால், ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சட்ட நிபுணர்கள் முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, அமைச்சரவை, சட்டசபையை கூட்டி, அவசரச் சட்டம் நிறைவேற்றி, அதை மத்திய அரசு மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, ஜல்லிக்கட்டை நடத்த முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளாராம். இதற்கு பிரதமர் மோடி உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையில், பன்னீர் இதனை செய்ய போகிறாராம். இதைதான் சூசகமாக செய்தியாளர் சந்திப்பில், மாநில அரசின் நடவடிக்கையை விரைவில் பாருங்கள் என்றும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். *இந்தநிலையில், அவசரச் சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று முதல்வர் எடுப்பார் என்று, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.*

ஆனால், மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தாலும், உடனடியாக பீட்டா அமைப்பு நீதிமன்றத்தின் கதவைத் தட்டி அதற்கு தடை பெற முயற்சிக்கும் என்ற தகவலும் வந்திருப்பதால், ஜல்லிக்கட்டு நடைபெறுமா? தடை உடைபடுமா? என்பதை பொறுந்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...