போராட்ட களத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் !!

போராட்ட களத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள், இன்று ஒரு காவல்நிலையத்தில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் அடிப்பது போன்ற சமூக வலை தளங்களில் காணொளி காட்சி ஒன்று பரப்பப்படுகிறது அதற்கும் தற்போது நடைபெறும் தன்னெழுச்சியான அறப்போராட்டத்திற்கும்  யாதொரு தொடர்பும் இல்லை எந்த வகையிலும் இது போன்ற சதிகளை நம்பி
உணர்ச்சிவசப்பட்டு வன்முறையில் இறங்கிவிட வேண்டாம். எப்படியாவது வன்முறையை தூண்டி நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி போராட்டத்தின் மாண்பையே குலைக்கும் நோக்கில் இவ்வாறான சதி செயல்களில் PETA மற்றும் அதனை சார்ந்த அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

காவல்துறையினர் போராட்டம் துவங்கிய நாள் முதல் இந்த நிமிடம் வரை எல்லா இடங்களிலும் மிகவும் கனிவுடன் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே போராட்டம் வலுவாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று உலகமே வியந்து உற்று கவனித்து வருகின்றது நமது தன்னெழுச்சியை தொடரட்டும் நமது போராட்டம் அறவழியில் அமைதியுடனும் கண்ணியத்துடனும்,

*15  ஆண்டு காலமாக இதற்காக உடலுழைப்பு மற்றும் பொருளிழப்புடன் சட்டரீதியாக போராடி வரும் அண்ணன் ராஜசேகர்  மற்றும் அண்ணன் கார்திகேயசிவசேனாபதி அவர்கள் வகுத்துள்ள தெளிவான பாதையில் பயணிப்போம்*. நிச்சயம் இந்த போராட்டம் வெல்லும்.உலக போராட்ட வரலாற்று பதிவுகளில் முக்கியமானதொரு இடத்தை பிடிக்கும்.

எனவே நாளைய வரலாற்று நாயகர்களே நல்ல முறையில் நமது போராட்டம் பதியப்படுவது உங்களின் கைகளில் ஏனெனில் இது உணர்வு குவியலின் வழியே அறிவார்ந்த அறப்போராட்டம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...