ஜல்லிக்கட்டு மீதான தடை உத்தரவுக்கு எதி ராக,தமிழகம் முழுவதும், மாணவர்கள் கொதித் தெழ, 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங் கள் பெரிதும் உதவின.
பொங்கல் பண்டிகைக்கு முன் வரை, ஜல்லிக் கட்டு நடத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பிரச் னையை,
அரசியல்வாதிகள் கையில் எடுத்த னர். பொங்கல் பண்டிகைக்கு, ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவானதும், மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், பகிரங்க மன்னிப்புக் கோரினார்; மாநில அரசு அமைதியானது.
அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்தவலியுறுத்தி, சமூக அமைப்புகள் களமிறங்கின. அவர்களுக்கு, மாணவர்களின் ஆதரவு கிடைத்தது. 'தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க, அனைவரும் ஒன்று திரள்வோம்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறும் வரை போராடுவோம்' என, மாணவ, மாணவியர், 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங்கள் மூலம், செய்திகளை பரப்பினர்.
சில நிமிடங்களில், இச்செய்திதமிழகம் முழுவதும் பரவியது. நேற்று முன்தினம், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், வகுப்புகளை புறக்கணித்து விட்டு, போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை யில், அனைத்து பகுதிகளில் இருந்தும், மாணவ, மாணவியர், மெரினா கடற்கரையில் திரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.எவ்வித துாண்டலும் இன்றி, சமூக வலை தளங்களில் பரவிய வேண்டுகோளை ஏற்று, மாணவர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள் ளது, மத்திய, மாநில அரசுகளை அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.