அரசு பள்ளி மாணவர்கள் கட்டுரை போட்டியில் அபாரம் !

 இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான திருப்பாவை மற்றும் திருவெம்பாவை குறித்த கட்டுரை மற்றும் ஒப்புவித்தல் போட்டி, சேலம், பழைய பஸ்ஸ்டாண்ட், வாசவி மஹாலில், கடந்த, 6ல் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி தலைமையில், போட்டி நடந்தது.



அதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பாவை கட்டுரை போட்டியில், தாரமங்கலம் எம்.ஜி.ஆர்., காலனி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் ஜனாத் முதல் பரிசு, மதன் மூன்றாம் பரிசு பெற்றனர்.

மேலும், திருவெம்பாவை கட்டுரை போட்டியில், அருணாதேவி முதல் பரிசு, ஜோதி மூன்றாம் பரிசு பெற்றனர். அவர்களை, தாரமங்கலம் ஏ.இ.ஓ., முத்து, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...