கணித உபகரணங்கள் கொண்டு கற்பிக்கும் திட்டம் விரிவாக்கம்

அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும், கணித உபகரணங்கள் கொண்டு, கற்பிக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது.

நடுநிலைப்பள்ளிகளில், கணித ஆய்வகம் அமைக்கும் திட்டம், கடந்த 2014ல், அறிமுகம் செய்யப்பட்டது. மாவட்ட வாரியாக, இரு பள்ளிகள் வீதம், 64 பள்ளிகளில், கணித ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.





கற்பித்தல் கருவிகள் கொண்டு வகுப்புகள் நடத்துவதால், மாணவர்கள் ஆர்வமுடன் கவனிப்பது தெரியவந்தது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், திட்டத்தை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.




இதற்காக, கோவையில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டங்கள், நேற்று துவங்கின; நாளையுடன் (ஜன., 11ம் தேதி) நிறைவடைகிறது. இந்த வகுப்பில், எண்கணிதம், இயற்கணிதம், தேற்றங்கள், சூத்திரங்கள் விளக்கும் முறை குறித்து, ஆசிரியர் பயிற்றுனர்கள் வாயிலாக விளக்கப்படுகிறது.




இதுகுறித்து, ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், ”பள்ளி மாணவர்கள் வைத்திருக்கும் கணித உபகரண பெட்டியில், அளவீடு கருவிகள் சிறிதாக இருக்கும். இதை கொண்டு வகுப்பு நடத்துவது, சிரமமாக இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.




”இச்சிக்கலுக்கு தீர்வு காண, அனைத்து அளவீடுகளும் பெரிதாக இருக்கும்படியாக, 20 அளவீடு கருவிகள் கொண்ட உபகரணப் பெட்டி, பள்ளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோணம், அளவுகோலில், எண்கள் தெளிவாக இருப்பதால், மாணவர்கள் புரிந்து கொள்வது, எளிதாக இருக்கும்,” என்றனர்.




மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பிப்பது எப்படி?




கோவை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில், உள்ளடங்கிய கல்வி திட்டம் செயல்படுகிறது. இங்கு, சாதாரண மாணவர்களோடு, மாற்றுத்திறனாளிகளும் இணைந்து படிப்பர். இவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர்கள் மூலம், வாரத்தில் இருநாட்கள், வகுப்புகள் நடத்தப்படும். மற்ற நாட்களில், வகுப்பு ஆசிரியர்களே, பாடம் நடத்துவது வழக்கம்.




பல்வேறு விதமான மாற்றுத்திறனாளி மாணவர்கள், வகுப்பில் இருப்பதால், அவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்துதல், எளிதில் விளக்குவது குறித்த பயிற்சி, ஆசிரியர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...