தலைவர்களே இல்லாமல் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராட்டக்களத்தில் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்தப் போராட்டத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து வருகிறது. எந்தவித
வன்முறையும் இல்லாமல், அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை சாதாரணமாக நினைத்தது தமிழக காவல்துறை. அதன்பிறகு நாட்கள் செல்லச்செல்ல... அதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது.