நீட்' தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் !!

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, ‛நீட்' நுழைவு தேர்வை எதிர்த்து, தமிழக சட்டசபையில், இன்று சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ‛நீட்' தேர்வு இன்றி மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை நடக்கும்.


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு அனைத்து மாநிலங்களிலும், ‛நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், கடந்த ஆண்டு மட்டும், அரசு ஒதுக்கீட்டு
இடங்களுக்கு, ‛நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து மாநில மாணவர்களும், ‛நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.


*சட்டமுன்வடிவு*

இந்த சூழ்நிலையில், ‛நீட்' தேர்வை எதிர்த்து, சட்டபையில், சட்ட முன்வடிவை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார். பழைய முறைப்படி, பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இளம்கலை மற்றும் முதுகலை என இரண்டு வகைகளிலும், பழைய முறைப்படியே மாணவர் சேர்க்கை நடக்கவும் இதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

‛நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த சட்டமுன்வடிவை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...