எருமைப் பந்தயம் கர்நாடகாவில் தொடர் போராட்டம்!

ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என இளைஞர்கள் தமிழகத்தில் போராடியதுபோல, கர்நாடகத்தில் எருமைப் பந்தயமான கம்பாலா விளையாட்டை நடத்த அனுமதிகோரி, தென் கன்னட மாவட்டங்களில் போராட்டம் வலுத்து வருகிறது.



கர்நாடகத்தில் தென் கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த கம்பாலா விளையாட்டுக்குத் (எருமைப் பந்தயத்துக்கு) தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், தென் கன்னட மாவட்டம், மங்களூரு அருகே உள்ள மூடுபித்ரி ஒண்டிகட்டே பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாரம்பரிய விளையாட்டான கம்பாலாவை ஆதரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மூடுபித்ரியில் இருந்து ஒண்டிகட்டே வரை பேரணி நடைபெற்றது. பேரணியில், பாரம்பரிய விளையாட்டான கம்பாலாவை மீண்டும் விளையாட அனுமதிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மூடுபித்ரி எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான அபய்சந்திர ஜெயின், 'நமது பகுதியின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலாவை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும். கம்பாலா விளையாட்டை அனுமதிக்க மாநில அரசு தயாராக உள்ளது. மத்திய அரசும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் என்று நம்புகிறேன். கம்பாலா விளையாட்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். கம்பாலா விளையாட்டை அனுமதிக்கும் வரை எந்த சமரசத்துக்கும் ஒப்புக்கொள்ளக்கூடாது' இவ்வாறு அவர் பேசினார். பேரணி, போராட்டத்தில் கம்பாலா விளையாட்டில் பங்கேற்கும் பூட்டிய எருமை மாடுகளுடன் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கம்பாலா விளையாட்டை நடத்த அனுமதிக்கக் கோரி, கர்நாடக அதிமுக-வினரும் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...