தமிழர் பண்டிகையான தைப்பூசம் பண்டிகைக்கு தமிழக அரசு விடுமுறை வழங்கவேண்டுமென்று சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
பல்லடத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது, தமிழர்களின்
முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பூசம் பண்டிகை தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த பண்டிகையானது சிங்கப்பூர், மலேசிய போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அந்த நாடுகளின் அரசுகள்கூட அதற்கு விடுமுறைகள் வழங்கி கொண்டாடுகின்றன. எனவே , தமிழக அரசு தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்படிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தைப்பூச பண்டிகைக்கு விடுமுறை வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும்.இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுகூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.