மாணவம் போற்றுவோம , நாட்டின் தலையெழுத்து நீ !!

நாட்டின் தலையெழுத்த மாற்றவந்த
மாணவச்சமுதாயமே !
விந்திய மாமலைபோல் ஓங்கிநிற்கும் தங்கமே
 கற்கண்டு வெல்லமே !
 உனக்கு இணை இல்லமே !   (நாட்டின்)

சிந்தனைத்துளிகள் கூடி  தேர்ச்சியாறு ஓடுது !
பந்தம்சொல்ல சாதனைகள் உன்னைவந்து கூடுது !

வண்ணமலர்ச் சோலைகளாய்
    தேர்வை எழுத வாருங்கள்!
உண்ணும்போதும் உறங்கும்போதும்
    நூலைமனதில் கூறுங்கள் !
     காலைநேரம் படியுங்கள் !
     கவலையின்றி வாழுங்கள் !                               (நாட்டின் )

ஏட்டில் உள்ளகல்விதானே
நாட்டில் உன்னை உயர்த்தும் !
கோட்டையேறிக்  கொடியையேற்றும்
மாண்பை  உனக்குக் கொடுக்கும் !
தேர்ச்சிபெறப் பயிற்சிபெற்றாய் ஓராண்டுக்காலம் ,
அயர்ச்சியற்ற மாணவரை அகிலம்போற்றும்
                                              பாரும் !
            அதிலும் வெற்றி காணுங்கள் !
           அகிலம்போற்ற வாழுங்கள் !  (நாட்டின்)
●●●●●●●●●●●●●●●●●●●▶▶▶▶▶▶●●●●●●●●●
கட்டிக்குளம்
ஒ.சுந்தரமூர்த்தி எம்.ஏ,பி.எட்,
தமிழாசிரியர்,
நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர் .
▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶◀↑◀◀◀◀◀◀◀◀◀◀◀◀◀◀◀◀◀◀

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...