புதுடெல்லி,ஆதார்கார்டின் அரசியலமைப்பு அங்கீகாரம் குறித்து கேள்வி எழுப்பி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை துரிதப்படுத்த விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதேவேளையில் ஆதார்கார்டு தகவல்களை தனியார் அமைப்புகள் சேகரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
தெரிவித்துள்ளது.தனிப்பட்ட உரிமையின் அச்சுறுத்தல் இருப்பதால், இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, துரிதமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். ஆனால், தகவல்களை பயோமெட்ரிக் முறையில் சேகரிக்கும் பணியை தனியார் அமைப்புகள் மூலம் மேற்கொள்வது நல்ல யோசனை அல்ல என்று தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரை நீக்கி உத்தரவிட்டது.மேலும், பல்வேறு நலத்திட்டங்களுக்கு விருப்பத்தின் பேரில் ஆதார் சேவையைபயன்படுத்தலாம் என்று அனுமதி அளித்தது.