வறட்சி நிவாரண நிதியாக ஒரு ரூபாயும் வரவில்லை !!

வறட்சி நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா நிதி கூட வரவில்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு, விதானசெüதா வளாகத்தில் திங்கள்கிழமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 121-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கர்நாடகத்தில் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதியுதவி செய்யுமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை அளித்ததோடு, விரிவான அறிக்கையையும் அளித்திருந்தது. அதை ஆராய்ந்த மத்திய அரசு, மாநில அரசுக்கு ரூ.1,782.44 கோடி அளிப்பதாகத் தெரிவித்திருந்தது. அந்த பணத்தில் ஒரு பைசாவை கூட மத்திய அரசு விடுவிக்கவில்லை.
வறட்சி நிவாரண நிதி கேட்டு 2016 அக்.27-ஆம் தேதி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருந்தும், இதுவரைக்கும் எந்த நிதியும் வந்து சேரவில்லை. வறட்சி நிவாரண நிதி வழங்குவது மத்திய அரசின் கடமையாகும். 14-ஆவது நிதி ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் வறட்சி நிவாரண நிதியை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும்.
2009-ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, வெள்ள நிவாரண நிதி வழங்கும்படி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை கர்நாடக அரசுப் பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது, உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கி, அந்த நிதியை உடனடியாகவும் விடுவித்தார்.
கர்நாடகத்தில் நடந்துவரும் வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் அவசியமில்லாமல் விமர்சனம் செய்து வருகின்றன. இதற்குப் பதிலாக, மத்திய அரசின் நிவாரண உதவிகளைப் பெற்றுத் தர மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
கர்நாடகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் கம்பளா விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பளா விளையாட்டுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. கம்பளா விளையாட்டை நடத்துவதற்கு கர்நாடக அரசின் ஆதரவு எப்போதும் உண்டு என்றார் அவர்.
அப்போது, பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், எம்.எல்.சி. வி.எஸ்.உக்ரப்பா, தலைமைச் செயலர் சுபாஷ்சந்திரா குன்ட்டியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...