சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆராய்ச்சி மாணவியிடம், போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து, புலன் விசாரணை நடத்த, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக, சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதற்கான முன்பதிவு மைய சிறப்பு கவுன்டர்களை, போக்குவரத்து துறை அமைச்சர்
விஜயபாஸ்கர், நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
அப்போது, அங்கு வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ஆராய்ச்சி மாணவி அன்னபூர்ணா, 26, 'உடல் நலம் பாதிக்கப்பட்ட நான், மயக்கம் வந்ததால், பேருந்து நிலையத்தில் படுத்திருந்தேன். போலீசார் என்னை கேவலமாக பேசியதுடன், அநாகரிகமாக நடந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் ஓய்வு எடுக்கக் கூடாதா; பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு...' என, அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவம் குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, ஆணைய தலைவர், டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:
சம்பவம் பற்றி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின், கூடுதல் டி.ஜி.பி., விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த விசாரணையை, போலீஸ் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, எட்டு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, மர்ம காய்ச்சலில் இருவர் பலியானது தொடர்பான மற்றொரு வழக்கில், சுகாதார இயக்குனர் அறிக்கை அளிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், புது கும்மிடிப்பூண்டி, இருளர் காலனியில், எட்டு குடும்பங்களை சேர்ந்த, 42 பேர் வசிக்கின்றனர். அதில், எல்லாம்மாள், 32, ரமேஷ், 30, சீனிவாசன், 20, அங்கம்மாள், 58 ஆகியோர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில், சீனிவாசன், அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும், பலருக்கு நோய் தாக்கம் தென்பட்டதால், 38 பேர், புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஊராட்சி சேவை மையத்தில், தங்க வைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக வழக்கு பதிவு செய்தது. பின், ஆணைய தலைவர், டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:
மர்ம காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து, சுகாதார துணை இயக்குனர் பதவிக்கு குறையாத அதிகாரி மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை அறிக்கையை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர், எட்டு வாரத்தில் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில்
கூறியுள்ளார்.