' செயல்பாடு குறித்த உளவுத்துறை விசாரணையால் பீதி
முன்னாள் முதல்வர் ஜெய
லலிதாவின் விருப்ப திட்டமான, 'அம்மா' உணவகங்கள், சென்னையில், பிசுபிசுக்க துவங்கி
விட்டன. நிர்வாக குளறுபடி காரணமாக, உணவகம் நடத்துவதன் மூலம், மாநகராட்சி, ஆண்டு
தோறும், 120 கோடி ரூபாய்
நஷ்டத்தை சந்திக்கிறது.
இந்நிலையில், உணவகத்தின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை ரகசிய விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏழை, ஏளிய மக்களின் பசியை போக்கும் வகையில், சென்னையில், 2013ல், 'அம்மா' உணவகங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.
ஆரம்பத்தில், 15 உணவகங்கள் திறக்கப்பட்டன; அதற்கு நல்ல பலன் கிடைத்ததால், வார்டுக்கு ஒன்று என, 200 உணவகங்கள், பின், ஏழு அரசு மருத்துவமனைகளிலும், 'அம்மா' உணவகங்கள் என, படிபடியாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், 'அம்மா' திட்டம் செயல்படுத்தப்பட்டது
ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், கடந்த, செப்., 24ம் தேதி, அமைச்சர் வேலுமணி, 107 'அம்மா' உணவகங்களை, புதிதாக துவங்கி வைத்தார். இதன் மூலம், மொத்தம், 407 'அம்மா' உணவகங்கள், சென்னையில் இயங்கி வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதா மறைவின் போது, தமிழகம் முழுவதும், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அப்போது கூட, ஜெ.,யின் விருப்ப திட்டமான, 'அம்மா' உணவகம் மூடப்படாமல், தொடர்ந்து இயங்கியது.
ஜெ.,க்கு அஞ்சலி செலுத்த, ஆயிரக்கணக்கான மக்கள், சென்னைக்கு திரண்டு வந்தனர்; அதனால், தொடர்ந்து ஒரு வாரம், 'அம்மா' உணவகங்களில், மூன்று வேளை உணவும் இலவசமாக வழங்கப்பட்டன.
பொதுமக்கள் மத்தியிலும், வேறு மாநிலங்களிலும், பெரிய அளவில் வரவேற்பை பெற்ற, 'அம்மா' உணவகங்களின் செயல்பாடுகள், சமீபகாலமாக சொல்லும் படியாக இல்லை.
ஜெ., மறைவு, மாநகராட்சி நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவு, தமிழக அரசியலில் நிலவும் குழப்பங்கள் போன்ற காரணங்களால், உணவகங்களின் செயல்பாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்காமல் விட்டுவிட்டனர்.
அந்தந்த உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தான், 'ராஜா'வாக உள்ளனர். உணவகத்தில் என்ன அளவில் சமைக்கின்றனர்; எவ்வளவு விற்பனை ஆனது; உணவின் சுவை, தரம் பரிசோதிக்கப்படுகிறதா என்ற எந்த கேள்விக்கும்,யாரும் பதில் சொல்வது இல்லை.
உணவக பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்களை மதிப்பதே கிடையாது. அவர்களை பணியிட மாற்றமோ, வேலையை விட்டு துாக்கினாலோ, வட்ட செயலர் முதல், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலர் வரை, மாநகராட்சி ஊழியர்களை, போனில் மிரட்டும் அவலமும் நடக்கிறது.
விடுமுறை எடுக்கும் ஊழியர்கள், தாங்களாக வருகை பதிவேட்டை திருத்தும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதை கூட, மாநகராட்சி அதிகாரிகள் தட்டிக்கேட்க முடியவில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள் தலையீடு அதிகமாக இருப்பதால், 'நமக்கேன் வம்பு' என, சுகாதார ஆய்வாளர்கள் ஒதுங்கி ஓட துவங்கிவிட்டனர்.
இதனால், 'அம்மா' உணவகங்களில், உணவின் சுவையும், தரமும் வெகுவாக குறைந்து விட்டது; விற்பனையும் சரிந்துள்ளதால், சில உணவகங்கள் மூடும் நிலைக்கும் வந்துவிட்டன.
ஒரு உணவகம் நடத்த, மாதம் ஒன்றுக்கு, மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதன்படி கணக்கிட்டால், வருவாய், செலவு என, 407 உணவகங்களுக்கும் சேர்த்து, மாநகராட்சிக்கு, ஆண்டிற்கு, 120 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது.
நிர்வாக குளறுபடியே, இந்த நஷ்டத்திற்கு காரணம் என்றும், முறையாக திட்டமிட்டு உணவகத்தை இயக்கினால், பெருமளவு செலவை குறைக்கலாம் என்றும் கருத்து எழுந்துள்ள நிலையில், 'அம்மா' உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து, உளவுத்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
இதில், தற்போது நடைபெறும் குளறுபடிகள், அரசியல் தலையீடு, மாநகராட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதால், ஊழியர்களும், அம்மா உணவக பணியாளர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முறைகேட்டின் பின்னணியில் அமைச்சர்
சென்னையில் உள்ள, 'அம்மா' உணவகங்களுக்கு, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம், காய்கறி வினியோகம் செய்யப்படுகிறது. காய்கறி எடை, தரம் குறைவாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, நமது நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஒரே நாளில், அனைத்து, 'அம்மா' உணவகங்களிலும் காய்கறி அளவு, தரம் பரிசோதிக்கப்பட்டது. இதில், தரமற்ற காய்கறிகள், எடை மிகவும் குறைத்து அனுப்புவது தெரியவந்தது. அத்துறை அமைச்சரின் தலையீடு இருப்பதால், இந்த விஷயத்தில், எந்த மேல் நடவடிக்கையையும், மாநகராட்சி இதுவரை எடுக்கவில்லை. உளவுத்துறை அறிக்கையில், இந்த விவகாரமும் இடம் பிடித்துள்ளதாக தெரிகிறது.