நெடுஞ்சாலையோரம் மூடப்படும் மதுக்கடைகளின் பட்டியல் தயார் !!

'நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்' என்ற கோர்ட் உத்தரவை அடுத்து, மூடப்படும் கடைகள் குறித்த பட்டியல், மாவட்ட மேலாளர்களால் அளிக்கப்பட்டுள்ளது.

'மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடை மற்றும் பார்களை, நடப்பாண்டு மார்ச் இறுதியுடன் மூட வேண்டும்' என, கடந்த மாதம், உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் மூட வேண்டிய கடைகள் குறித்த விபரங்களை, டாஸ்மாக் நிர்வாகம் கேட்டிருந்தது.

மாவட்ட வாரியாக, இதுபோன்ற கடைகள் குறித்த விபரங்கள்; கடை எண்; அமைந்துள்ள பகுதி; வரைபடம்; நெடுஞ்சாலை ரோடு விபரம்; சராசரி விற்பனை; பார் வசதி; ஊழியர்கள் விபரம்; பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு குறித்த விபரம்; மாற்று இடத்துக்கான வாய்ப்பு; விதிகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த விபரங்கள் அனைத்தும், சென்னை 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அனைத்து மாவட்ட மேலாளர்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், மாற்று இடம் தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.




ஊழியர்கள் கவலை : திருப்பூர் மாவட்டத்தில், 241 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த, 23 கடைகள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, 159 கடைகள், மாநில நெடுஞ்சாலையில் உள்ளன. இது குறித்து விபரம் சேகரித்து அளிக்கப்பட்டுள்ளது.கடை ஊழியர்களுக்கு, உடனடியாக மாற்றிடம் தேடுமாறு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டால், அதன் ஊழியர்கள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவர் என்ற தகவலால், அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...