ஜல்லிக்கட்டுக்காக மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வராதது ஏன்?

சென்னை, ''ஜல்லிக்கட்டுக்காக, பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தை, மத்திய அரசு திருத்தியிருந்தால், நீதிமன்றத்தை அவமதிப்பது போலாகும்; அதனால், அதை செய்யவில்லை,'' என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கூறினார்.அவர் அளித்த பேட்டி:
சென்னை, மெரினா போராட்டத்தில், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. அவர், 2016ல் அறிக்கை வெளியிட உத்தரவிட்டார். இம்முறை, தமிழக அரசு சட்டம் இயற்ற உதவியுள்ளார். அவருக்கு எதிராக முழக்கமிட்டதும், தேசியக் கொடியை அவமதித்ததும் தேச விரோதம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப, பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தை, மத்திய அரசு திருத்தியிருந்தால், நீதிமன்றத்தை அவமதிப்பது போலாகும். அதனால் தான், தமிழக அரசு மூலமாக, அது செயல்படுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை, 'பொறுக்கி' என, சுப்பிரமணியன் சாமி கூறியது தவறு. நேரம் இல்லாததால், தம்பிதுரையை, பிரதமரால் பார்க்க முடியவில்லை. சென்னை - துாத்துக்குடி; துாத்துக்குடி - குளச்சல் விரைவு வழிச்சாலை திட்டத்திற்கு, திட்ட அறிக்கை தயாராகி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...