கலெக்டருக்கு விளம்பரம் வேண்டாம் என கடிதம். !

கலெக்டருக்கு நெடுஞ்சாலைத்துறை கடிதம் வேண்டாம் விளம்பரம்: வேண்டும் விபரம்! விதிமீறல் பலகைகளை அகற்றுவது என்னாச்சு?

தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசின் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற, நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்று, கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டத்தில், சமீபமாக, விதிமீறல் விளம்பரப் பலகைகளின் ஆதிக்கம், உச்சத்தை எட்டியுள்ளது. முன்பிருந்த கலெக்டர்கள் யாரும், இதுபோன்ற 'மெகா' விளம்பரப் பலகைகளுக்கும், பயணிகள் நிழற்குடைகளில் பெரிய விளம்பரங்கள் வைக்கவும், அனுமதி வழங்கியதில்லை. ஆனால், தற்போதைய கலெக்டர், ஆளுங்கட்சியினரின் நிறுவனங்களுக்கு, விளம்பரப்பலகை வைக்க அனுமதியை வாரி வழங்கியுள்ளார்.

இதற்காக அனுமதி பெற்றுள்ள விளம்பர நிறுவனங்கள், பெறப்பட்ட அனுமதிக்கு அதிகமாகவும், அனுமதி தரப்பட்ட அளவுக்கு, பல மடங்கு பெரிதாகவும் பிரமாண்ட விளம்பர பலகைகளை வைத்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றன. இவை அனைத்தும், இந்திய சாலைக்குழும விதிகளுக்கு முரணாகவும், விளம்பரப் பலகைகள் தொடர்பான பல்வேறு கோர்ட் உத்தரவுகளை அப்பட்டமாக மீறுவதாகவும் உள்ளன.

கோவை நகரின் பல்வேறு மாடிக்கட்டடங்களில், அனுமதியின்றியும், விதிகளை மீறியும், ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இரு மடங்காக, கோவை நகருக்கு வெளியே உள்ள அவிநாசி ரோடு, பாலக்காடு ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகளிலும், 'மெகா' விளம்பரப் பலகைகள், விதிகளை மீறி நிறுவப்பட்டுள்ளன.

இவை அனைத்தும், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து, விபத்துக்களை ஏற்படுத்துவதற்கு முழுமுதற் காரணமாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளாகும்.

தற்போது, இத்தகைய விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, மாவட்ட நிர்வாகத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை கலெக்டருக்கு தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின், அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; இதே சாலை ஓரங்களில், பேருந்து நிறுத்தம், சிக் னல் மற்றும் நடைபாதைகளில் விளம்பரம் வைக்க கலெக்டர் அனுமதித்திருந்தால் அதை ரத்து செய்து, அது தொடர்பான விபரங்களை அனுப்ப வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில், இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஏற்கனவே, ஜன.,10க் குள் விதிமீறல் விளம்பரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் 'கெடு' விதித்திருந்தது. இடையில், 'பிளக்ஸ்' பேனர்களை அகற்றி, அதிகாரிகள் கணக்கு காண்

பித்தனர்.

இந்த விவகாரத்தில், உறுதியான நடவடிக்கயை கலெக்டர் எடுக்காவிட்டால், விரைவில் கோர்ட் படியேறி, பதிலளிக்க வேண்டியிருக்குமென்பது நிச்சயம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...