முதல்வரா ? தலைமை நீதிபதியா ?

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடியரசு தினத்தில் கொடியேற்றக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை 68வது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


தமிழக கவர்னராக இருந்த ரோசய்யாவின் பதவிக் காலம் முடிந்தபின்னர், அந்தப் பதவியை கூடுதலாக மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் கவனித்து வருகிறார். அவர், மராட்டிய மாநிலத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதால், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தினத்தன்று அவரால் தேசியக் கொடியை ஏற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், டிராஃபிக் ராமசாமி தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஆளுநர் இல்லாதபட்சத்தில் தலைமை நீதிபதி கொடியேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு, உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் இன்று வழக்கை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

அப்போது டிராஃபிக் ராமசாமி ஆஜராகி, ‘குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தின விழாவில் முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற அதிகாரம் கிடையாது. எனவே, நாளை நடைபெறும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்போகிறேன். அந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி இன்றே விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று கூறினார். இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். ‘முதலில் நீங்கள் வழக்கை தாக்கல் செய்யுங்கள். அந்த வழக்கு வழக்கம்போல பிற வழக்குகளுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...