மூன்றுமுறை மட்டுமே நீட் தேர்வு!

ஒவ்வொரு வருடமும் 4.75 லட்ச மாணவர்கள் மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு 56 நகரங்களிலுள்ள 739 மையங்களில் நடைபெறுகிறது. ஆனால் நாட்டில் 52,965 மருத்துவச் சீட்டுகள் மட்டுமே உள்ளன. அதனால், மீண்டும் மீண்டும் நீட் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு யூஜிசி ஒரு முடிவை

எடுத்துள்ளது. இந்நிலையில், மருத்துவ பொதுநுழைவுத் தேர்வான நீட் தேர்வை தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குள் மூன்று முறை எழுதலாம் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று டெல்லியில் நீட் தேர்வு குறித்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்த தேர்வு குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நீட் தேர்வில் பங்கேற்க குறைந்தபட்சமாக மாணவர்கள் 17 வயது நிறைவுபெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 25 வயது வரையும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 வயது வரையும் நீட் தேர்வில் பங்கேற்கலாம். மேலும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதுக்குள் மூன்று முறை மட்டுமே நீட் தேர்வு எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து, மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தின் இயக்குநர், பிரவீன் ஷிங்ரே (Pravin Shingare) கூறுகையில், இது ஒரு நல்ல முடிவு. ஏனென்றால், சில மாணவர்கள் தொடர்ந்து நீட் தேர்வை எழுதி வருகின்றனர். பின்னர், அதில் வெற்றி பெறவில்லை என்றதும் பிஎஸ்சி படிப்பில் சேர்ந்து விடுகின்றனர், ஆனாலும் நீட் தேர்வு எழுதுவதை நிறுத்துவதில்லை என்றார்.

இதுகுறித்து அனைத்து மாநிலங்களிலும் தகவல் கிடைக்கவில்லை என்றாலும், மகாராஷ்டிராவில், ஒவ்வொரு ஆண்டும் 17 வயதானவர்களுடன் வயது முதிர்ந்தவர்கள் போட்டியிடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு பொது நுழைவுத் தேர்வில் 12,000 பேர் பங்கேற்றனர். இந்த எண்ணிக்கை 2008 ஆம் ஆண்டு 13,568 ஆக உயர்ந்தது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அளித்த தகவலின்படி, பொது நுழைவுத் தேர்வில் 38 வயதுடையவர்கள் பங்கேற்றனர். மேலும் 30 வயதுள்ள 100 பேரும் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.

இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி மற்றும் மண் ஆராய்ச்சி இயக்குநரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...