தொடர் விபத்துகள் : தலைமை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்!

சாலைப் பாதுகாப்பு தொடர்பான வழக்கில், பதிலளிக்காத தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.



மது அருந்திவிட்டு, வேகமாக வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது என்பதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விபத்துகள் ஏற்படுவது குறையவில்லை.

இந்நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் தான் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஏற்படும் மொத்த விபத்தில் 26.4 % விபத்துகள் இருசக்கரவாகனங்களால் நடக்கிறது. லாரிகளால் 20.1 % விபத்துகளும், கார்களினால் 12.1 %விபத்துகளும், பஸ்களினால் 8.8% விபத்துகளும், எஸ்.யு.வி. வகை வாகனங்கள் மூலம் 3 % விபத்துகளும், ஜீப்களால் 4.5 % விபத்துகள், ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்களினால் 5.1 %விபத்துகளும் நடக்கிறது. 47.9% விபத்துகள் வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படுகிறது.

விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 13 % (17,376 பேர் ) சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக,சென்னையில் மட்டும் 9.3% விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

வேகத் தடை அமைத்தல், மக்கள் பயன்படுத்தும் கார், ஜீப், இருசக்கரவாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல் போன்றவை தொடர்பாக மாநில அரசுகள் பதிலளிக்குமாறு ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பெரும்பாலான மாநிலங்கள் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று அறிக்கை அனுப்பின. ஆனால், தமிழகம், ஆந்திரா, டெல்லி, அசாம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களும் நிலை அறிக்கை தாக்கல் செய்யத் தவறிவிட்டன. எனவே அந்த 10 மாநிலங்களின் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இன்னும் நான்கு வாரத்தில் பதிலளிக்க அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில், 5,01,423 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 1,374 விபத்துகள் நடக்கின்றன. இவற்றில், நாள்தோறும் 400 பேர் பலியாகின்றனர். சராசரியாக ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் நடக்கின்றன. மேலும், விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 54% பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...