ரேஷன் கடைகளில் நாளை முதல் பொங்கல் பரிசு !!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டை, காவலர் குடும்ப அட்டை மற்றும் முகாம் களில் தங்கி உள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ

பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்த திட்டத்தின் மூலமாக ஒரு கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்பட்டு விடும். குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது" என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...