காத்திருக்கும் கோப்புகள்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 75 நாட்களுக்குப் பிறகு இறந்தார்.



ஜெயலலிதா மறைந்ததும் உடனடியாக ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்று இன்றுடன் 33 வது நாள் ஆகிறது. மொத்ததில் 107 நாட்களாக, முதல்வர் முக்கிய கோப்புகளில் கையொப்பம் இடாமல் காத்திருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அந்தந்த துறையைச் சேர்ந்த செயலர்கள் பலர் மூன்று வருடத்துக்கு மேலாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இடமாற்றம் வரும் நிலையில், கோப்புகளில் கையொப்பம் போடாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள். இன்னொரு பக்கம் அமைச்சர்களும் முக்கிய முடிவுகளை எடுக்காமல், சசிகலா முதல்வராக இன்றோ, நாளையோ வந்துவிடமாட்டரா என்று காத்திருக்கிறார்கள். சசிகலா முதல்வராக பதவியேற்கத் தயாராகயிருந்தாலும், ஆளுநர் மாளிகை கதவு திறக்கப்படவில்லை. மெல்ல திறக்கும் கதவு என்று காத்திருக்கிறார்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...