காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் உத்தரவை மீறி கேரள அரசு தொடர்ந்து பவானி, பாம்பாறு போன்ற ஆறுகளின் குறுக்கே சட்டவிரோதமாக அணைகள் கட்ட அவ்வப்போது முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.
2002ஆம் ஆண்டு பவானி நதிக்கு குறுக்கே முக்காலி என்ற இடத்திலும், 2012ஆம் ஆண்டு சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும் அணைகள் கட்ட நடைபெற்ற முயற்சிகள் தமிழக மக்களின் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டன. தற்போதும் பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக்கண்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது, காவிரி நடுவர் மன்ற உத்தரவை மீறும் செயல் மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மேற்கு மாவட்டங்களின் வனவிலங்குகள், விவசாயம், குடிநீர் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளுக்கே பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். இதனால் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பல தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பவானி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தியும், தமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை மாவட்டம், ஆனைகட்டியில் அனைத்துக் கட்சிகள் சார்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் திமுக, தபெதிக, தமிழ் மாநில காங்கிரஸ், கொஜக, தகொஇபே உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் அமைப்புகள், ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அமைப்புகளும் இணைந்த ஒரு போராட்டக் குழு ஏற்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தை நாடுவது உள்ளிட்ட போராட்டத்தின் அடுத்த வடிவத்தை முடிவு செய்யலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மறை, சுற்றுச்சூழலியலாளர், கோவை மாவட்டம்.