ஊடங்களுக்குப் பேட்டி : ஆணையருக்கு நோட்டீஸ்!

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்தது ஏன்? எனக் கேட்டு, மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான
போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் காவல் துறையினர் வேண்டுமென்றே பொதுமக்களை துன்புறுத்துவது, வாகனங்களுக்கு தீவைப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

கலவரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது சமீபத்தில், இந்தக் கலவரம் தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி எப்படி பேட்டி வழங்கலாம் என்று கேட்டு, நேற்று முன்தினம் ஜெ.அன்பழகன் சார்பில் திமுக வழக்கறிஞர் ஆர்.கிரிராஜன் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், ‘தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மெரினா கடற்கரைப் பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராடிவந்தனர். கடந்த 23ஆம் தேதி கூட்டத்தைக் கலைக்கும்வகையில் போலீஸார் எடுத்த நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள், மாணவர்கள், மீனவர்கள், தினக்கூலியை நம்பியிருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நடுக்குப்பம், அயோத்தியாகுப்பம், பாரதி சாலை, லாயிட்ஸ் சாலை, அம்பேத்கர் பாலம் பகுதியில் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு போலீஸாரே தீ வைத்தனர்.

நடுக்குப்பம் பகுதியில் மீன் சந்தை முழுமையாக எரிந்ததால், மீன் வியாபாரிகளின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல வாகனங்களுக்கு போலீஸாரே தீ வைத்ததற்கு ஆதாரமான வீடியோக்கள் உள்ளன. காயமடைந்தவர்களும் பொதுமக்களும் போலீஸாரின் இந்த நடவடிக்கைகளுக்கு சாட்சியாக உள்ளனர். இது தொடர்பாக பிரதமர், ஆளுநர் உள்ளிட்ட பலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார். சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதேநேரம், ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக தடயங்கள், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

காவல் துணை ஆணையராக இருக்கும் நீங்கள், கடந்த 26, 28 ஆகிய தேதிகளில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளீர்கள். நீதிமன்றம், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு உள்ளபோது நீங்கள் எப்படி பேட்டியளிக்கலாம்? இது, விசாரணை அதிகாரிகளின் நடவடிக்கைகளை பாதிக்காதா? ஐபிஎஸ் அதிகாரியான தங்களுக்கு விசாரணை தொடர்பான விஷயங்கள் தெரியாதா? எனவே, தாங்கள் இனி இதுபோன்ற தவறான தகவல்களை ஊடகங்களுக்கு அளிக்கக்கூடாது’ என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...