அவனியாபுரம்-அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு!!!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் இன்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளும் படி  விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.அலங்காநலூரில் பிப்ரவரி 10 ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.



இதுபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரும் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்தனர். பின்னர் விழாக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அவனியாபுரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி பிப்ரவரி 5 ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வருமாறு முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம். ஜல்லிக்கட்டு நடைபெற நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர், ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள், மற்றும் இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...