கோவை, 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களின் சொத்து விபரங்களை, இணையத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறதா' என, மாநில தேர்தல் கமிஷன் கருத்து கேட்டு
வருகிறது.சட்டசபை தேர்தல், பார்லிமென்ட் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்யும் சொத்து விபரங்களின் நகல், பொதுமக்கள் பார்வைக்கு அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். பின், மத்திய தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.தேர்தலில் போட்டியிடுவோர், உண்மை தகவலை சொல்லி இருக்கின்றனரா? அல்லது ஏதேனும் சொத்தை மறைத்திருக்கின்றனரா என, பொதுமக்கள் கண்டறிந்து, ஆட்சேபம் தெரிவிக்கலாம். இதேபோல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து விபரங்களையும், இணையதளத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறதா என, சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களிடம், மாநில தேர்தல் கமிஷன் கருத்து கேட்டுள்ளது.