அரசு அலுவலக உதவியாளர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு

திண்டுக்கல், ''நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்,'' என அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் கணேசன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:

அரசு துறைகளில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளர், அடிப்படை பணியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஊதியத்திற்கு ஏற்றவாறு தொழில் வரியை மாற்றி அமைக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான அனைத்து 'டி' பிரிவு பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் கொண்டு
வர வேண்டும்.உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களை அரசுப் பணியாளராக அறிவிக்க வேண்டும்.
கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் அழைத்து பேச வேண்டும். இல்லை எனில் மார்ச் 6 ல் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், ஏப்.,8 ல் உண்ணாவிரதம், மே 13 ல் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...