இனி எல்லாமே இணையதள 'டெண்டர்' : அதிரடி ஆணை பிறப்பித்தது மின் வாரியம் !

மின் வாரியத்தில், வரும், 20ம் தேதி முதல், அனைத்து பணிகளும் இணையதள, 'டெண்டர்' மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்; மின் தொடரமைப்பு கழகம் போன்ற நிறுவனங்கள் உள்ளன.



இவை, மின்சாரம் மற்றும் உபகரணம் கொள்முதல் மற்றும் கட்டுமான பணிகளை, 'டெண்டர்'கள் மூலம் மேற்கொள்கின்றன. இதற்காக, மின் வாரியம், ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.




நெருக்கடி : தற்போது, விண்ணப்பம் அளிக்கும் முறையில், டெண்டர்கள் உள்ளதால், சில நிறுவனங்களே பங்கேற்கின்றன; அதிக விலை புள்ளி வழங்குகின்றன. அரசியல் குறுக்கீட்டால், அதே விலைக்கு பொருட்களை வாங்க, அதிகாரிகளுக்கு நெருக்கடி தரப்படுகிறது. இதனால், மின் வாரியத்துக்கு, பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, இணையதள டெண்டர் கோர, மின் வாரியம் முடிவு செய்தது. அதை, சில பிரிவுகள் மற்றும் குறைந்த மதிப்பு உடைய பணிகளுக்கு மட்டும் செயல்படுத்தின. இந்நிலையில், வரும், 20ம் தேதி முதல், அனைத்து பணிகளையும், இணையதள டெண்டர் மூலம் மேற்கொள்ள, மின் வாரியம் அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது.




சிபாரிசு : இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இணையதள டெண்டரில், அதிக நிறுவனங்கள் பங்கேற்கும். அவை, தங்களின் ஆவணங்களை, 'ஸ்கேன்' செய்து, இணையதளம் வாயிலாக அனுப்பும். அனைத்து விபரங்களும், கம்ப்யூட்டரில் பதிவாகும் என்பதால், யாருடைய சிபாரிசும் ஏற்கப்படாது. நிறுவனங்கள், டெண்டர் படிவம் தர, அலுவலகம் வர வேண்டியதில்லை. ஆணையை பெற, அரசியல்வாதிகள், அதிகாரிகளை, கவனிக்க வேண்டி அவசியமில்லை. இணையதள டெண்டரில், அதிக நிறுவனங்கள் பங்கேற்கும் என்பதால், குறைந்த விலை புள்ளி கிடைக்கும். தகுதியான நிறுவனத்துக்கு ஆணை கிடைக்கும். இணையதள டெண்டர் பணிகளுக்கு, மத்திய அரசின், எம்.எஸ்.டி.சி., நிறுவனம் உதவி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...