வழக்குகளில் சாட்சி சொல்ல வராத சென்னை ஏ.டி.எஸ்.பி.க்கு தஞ்சாவூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
திருவாரூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய மதுரைசாமி, பதவி உயர்வு பெற்று சென்னை காவல் பயிற்சி கல்லூரியில் ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த காலங்களில் திருவாரூரில் பணியாற்றியபோது, திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 4
வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் குடியுரிமை பாதுகாப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த 4 வழக்குகளில் சாட்சி சொல்ல ஆஜராகுமாறு மதுரைசாமிக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால், அவர் சாட்சி சொல்ல வராததால், மதுரைசாமிக்கு பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.