மத்திய அரசு உருவாக்கிய 'ஆப்' மூலம் வறட்சி கணக்கெடுப்பு !!

மத்திய அரசு உருவாக்கி கொடுத்த புதிய, 'ஆப்' உதவியுடன், பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு, தமிழகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது.தமிழகத்தில், 2016 அக்டோபர் முதல் டிசம்பர் வரை, வட கிழக்கு பருவ மழை பெய்தது. சராசரியை காட்டிலும், குறைவாக மழை பெய்ததால், 21 மாவட்டங்களில், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.






சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள், நீரின்றி கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்; வறட்சி நிவாரணம் கோரி வருகின்றனர்.அதனால், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்த, முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பயிர் பாதிப்புகளை நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கு, மத்திய அரசு உருவாக்கி கொடுத்த, 'பூவன்' என்ற மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தி, வறட்சி குறித்த கணக்கெடுப்பில், வருவாய், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.




இது குறித்து, வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வறட்சி பாதிப்பை கண்டறிய, மாவட்டம் தோறும், 10 சதவீத கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களுக்கு, எண்கள் வழங்கப்படுகின்றன. அங்கு, கிராம நிர்வாக அதிகாரி, உதவி வேளாண் அலுவலர் ஆகியோர் சென்று, பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர்.




இதற்கு, மத்திய அரசு உருவாக்கி கொடுத்த, மொபைல் போன், 'ஆப்' பயன்படுத்தப்படுகிறது. பயிர் பாதித்த புகைப்படங்கள் மட்டுமின்றி, அட்ச ரேகை, தீர்க்க ரேகை குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு, 'ஆப்' உதவியுடன், மாநில வருவாய்த்துறை மற்றும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பயிர்கள், 33 சதவீத அளவிற்கு பாதிக்கப்பட்டால், அவை வறட்சியால் பாதித்ததாக உறுதி செய்யப்படுகிறது.




ஜி.பி.எஸ்., வசதியுடன், இந்த விபரங்களை, டில்லியில் இருந்தே, மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யலாம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்க, மத்திய அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...