SSTA - ஆசிரியர்கள் அமைப்பு சார்பாக நாளை -(20.01.2017 ) தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்பு !!

🌹🌹*BREAKING* *NEWS*🌹🌹

*SSTA -இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் !!

*மாநில* *அமைப்பு*

தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீரழிக்கும் விதமாக நமது பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கக் கோரியும்,*பீட்டா* அமைப்பை தடைசெய்யக்கோரியும் இலட்சக்கனக்கான இளைஞர்கள்,பெண்கள், மாணவ மாணவியர் பலநாட்களாக அறவழியில் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இதுவரையில் எந்த ஒரு தீர்வையும் காணவில்லை.


 தமிழக ஒட்டுமொத்த இளைஞர்கள் களம் காணும் இப்போராட்டத்தில் நமது கலாச்சாரத்தை காக்கும் விதமாகவும் பண்பாட்டை போற்றும் விதமாகவும் இப்போராட்டத்திற்கு *SSTA* (இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் ) தனது முழுஆதரவையும் அளிக்கிறது.
இதனை முன்னிட்டு 20/01/2017 அன்று அனைத்து ஆசிரியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து கருப்புச் சட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களிலுள்ள ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களிலோ அல்லது அருகில் நடக்கும் போராட்ட களங்களிலோ கலந்துகொள்வார்கள்.
போராட்டம் தொடரும் பட்சத்தில் ஆசிரியர்களும் தொடர்போராட்டங்களிலும் தங்களை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொள்வார்கள்.


மத்திய,மாநில அரசுகள் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

காலதாமப் படுத்தாமல் விரைந்து ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர அனுமதியும், பீட்டாவிற்கு நிரந்தர  தடையும் அளித்து போராட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


      இப்படிக்கு
   *SSTA* *மாநில* *அமைப்பு*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...