ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டார SSTA பொறுப்பாளர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் SSA மேற்பார்வையாளர் இருவர்களுடனான சந்திப்பு விபரம்.

இன்று (10/01/17) மாலை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டார SSTA பொறுப்பாளர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களைச் சந்தித்து, நமது இயக்க SSTA காலண்டர் மற்றும் டைரியை வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
சத்தியமங்கலம் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் அவர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து  புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு நமது SSTA இயக்க காலண்டர் மற்றும் டைரி வழங்கி மகிழ்ந்தனர். .

உதவித் தொடக்கக் கல்வி அலுவலக சந்திப்பு விபரம். .

💐பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு அகமகிழ்ந்தனர்.

💐கணினிமய பணி பதிவேடு பராமரிப்புக்கு ஆயத்தமாகும் வகையில் நமது உறுப்பினர்களின் பணிப் பதிவேடுகளைத் துல்லியமாகத் திருத்தம் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஏறக்குறைய யாவும் தயார் நிலையில் இருப்பதாகவும், விடுபட்ட பதிவுகளுக்கு உரிய நகல்களுடன் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

💐 2009 டிசம்பரில் பணி நியமனம் பெற்றவர்களின் பணிநியமன நாள் திருத்தம் குறித்து வைக்கப்பட்ட கோரிக்கையை நிவர்த்தி செய்துவிடலாம் என்று உறுதியளித்துள்ளார்.

💐ஆசிரியர்களின் பணப்பயன்கள் யாவும் உரிய காலத்தில் வழங்க ஆவண செய்யப்படுகிறது என்று மனமகிழ்ந்து கூறினார்.

💐சம்பளப் பட்டியல் திருத்தம் செய்து தருவது குறித்த விவாதத்தில், சம்பளப் பட்டியலின் தேவை குறித்து தெளிவான விளக்கத்தை எடுத்தியம்பினார்.

💐அலுவலகத் தகவல்களை ஆசிரியர்களுக்குக் குறுந்தகவல் மூலம் தெரிவிக்க வட்டாரச் செயலாளருக்கு தகவல்கள் தந்து உதவுமாறுக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

💐இன்றைய இனிய சந்திப்பு போலவே இவ்வாண்டு முழுவதும் இனிமையான உறவு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துடன் தொடரும் என்ற நம்பிக்கையுடன் விடை பெற்றோம்.

💐நன்றி! நன்றி! நன்றி!

💐புன்னகையைப் பரிசளிப்போம்;
பூபாளம் பாடி
பூத்தூவி  வாழ்த்துவர்
பூலோக மைந்தர்கள்!💐

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...