தாமதமாக வருமான வரி செலுத்தினால் ரூ.10,000 வரை அபராதம்!!!

வருமான வரியை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் செலுத்தாவிட்டால் அல்லது கால தாமதமாக செலுத்தினால் ரூ.5000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ஆனால், வருமான வரி செலுத்த வேண்டிய தேதிக்கு பிறகு, அதேசமயம் டிசம்பர் 31 ம் தேதிக்கு முன் வரியை செலுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ஒருவேளை டிசம்பர் 31 ம் தேதிக்கு பிறகு வரியை செலுத்தினால் அபராத தொகை ரூ.10,000 வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உடையவர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உடையவர்கள் தாமதமாக வருமான வரி செலுத்தினால் ரூ.1000 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...