கட்டாயம்! 100 நாள் வேலையில் ஊதியம் பெற ஆதார் எண்... ஊதியம் வழங்காமல் திருப்பி அனுப்பும் அவலம்!!!


வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் தங்களுடைய ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இதனால், ஆதார் எண் பதிவு செய்யாத நுாறு நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் வங்கிகள் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது.
இந்திய குடிமகன் ஒவ்வொருக்கும் அடையாளமாக கருவிழி, விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு ஆதார் அடையாள
அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தாலும் இதுவரை முழுமை பெறவில்லை. நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காக அனைத்திலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை தற்போது அடையாள அட்டையாக; ரேஷன் கார்டு பெறுவதற்கும், வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு செய்வதற்கும் பயன்பட்டு வந்தது. தற்போது இதன் பயன் விரிவாக்கம் செய்யப்பட்டு அனைத்து விதமான அரசு சலுகை பெறவும், சான்றிதழ் பெறவும் ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆதார் எண் வங்கி கணக்குகளில் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதன் பேரில், வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அனைவரும் ஆதார் எண்ணை இயக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி பெரும்பாலானோர் பதிவு செய்துள்ளனர். இன்னும் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்யவில்லை.
இருப்பினும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது ஊதியத்தை வங்கிகள் மூலம் பெறுகின்றனர். இந்த ஊதியம் பெறுவதற்கும், நுாறு நாள் தொழிலாளியாக வேலை செய்வதற்கும் ஆதார் எண் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதார் எண் வங்கிக் கணக்குகளில் பதிவு செய்யாதவர்களுக்கு நுாறு நாள் திட்டத்தில் ஊதியம் வழங்காமல் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. எனவே, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...