சென்னை முழுவதும் 7 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து கமிஷனர் ஜார்ஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர காவல் துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயச்சந்திரன் சாத்தாங்காடு குற்றப்பிரிவுக்கும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவபாலன் எண்ணூர் குற்றப்பிரிவுக்கும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வெற்றிசெல்வன் அபிராமபுரம் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஷாமலா புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுக்கும் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இருந்த இமாகுலேட் டிவோட்டா அயானாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த பூங்கோதை ஓட்டேரி குற்றப்பிரிவுக்கும், ஓட்டேரி குற்றப்பிரிவில் இருந்த அன்புக்கரசி உயர்நீதிமன்ற அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்ற அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த மஞ்சுளா ஏழுகிணறு குற்றப்பிரிவுக்கும் ஏழுகிணறு குற்றப்பிரிவில் இருந்த வனிதா பேகம் கொத்தவால்சாவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கொத்தவால்சாவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த சீனியம்மாள் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.