19 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவு!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நிலத்தடி நீரை உறிஞ்சி, விவசாய நிலங்களை நாசம் செய்யும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ‘மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்ட தலைநகரங்களில் நீர்நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேரோடு அகற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், 64 சதவிகித சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மீதமுள்ள 19 மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

பொது மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்துநிற்கும் சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மரங்களை அகற்ற மாணவர்களும் கல்லூரிப் பெண்களும் களமிறங்கியிருக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...