119 எம்.எல்.ஏ.,க்கள் தான் ?

சசிகலாவுக்கு ஆதரவாக, 119 எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர் என்ற தகவலை தமிழக அரசு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனபால் ஓட்டு போட முடியாது

அ.தி.மு.க.,வுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து, 135 எம்.எல்.ஏ.,க்கள். ஜெ., மறைவுக்கு பிறகு இந்த எண்ணிக்கை, 134 ஆக குறைந்து விட்டது. தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று இருந்தாலும், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் இல்லை. எனவே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 131. இதில், சபாநாயகர் தனபால் சட்டசபையில், ஆளும் கட்சி சார்பாக ஓட்டு போட முடியாது. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 130 ஆகிறது.

மூன்று பேர்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், அவரையும் சேர்த்து தற்போது, ஏழு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எனவே, சசி தரப்பில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 123 ஆக குறைகிறது. இதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நடராஜ் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் உள்ளார். மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர், பெரியகுளம் எம்.எல்.ஏ., கதிர்காமு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, சசி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 120 ஆக குறைகிறது. நிலைமை இப்படி இருக்க உயர்நீதிமன்றத்தில், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 119 என கூறப்பட்டுள்ளது.


சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. ஜெ., மறைவால் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ., இல்லை என்பதால், பெரும்பான்மையை நிரூபிக்க, 117 எம்.எல்.ஏ.,க்கள் தேவை. இந்த எண்ணிக்கையை விட, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் தான் கூடுதலாக உள்ளனர். இந்த பட்டியலில், கருணாசும் இடம் பெற்றுள்ளார். எனவே, மொத்தமுள்ள, 134 எம்.எல்.ஏ.,க்களில், 15 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு சசிக்கு இன்னும் கிடைக்கவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...