பள்ளிகளில் தேர்தல் பாடம் : தேர்தல் ஆணையம் பரிந்துரை !!

மாணவர்களுக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே தேர்தல் முறை குறித்த பாடத் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என, மத்திய அரசை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. நம் நாட்டில் 18 வயது நிரம்பியவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுகின்றனர்.



இந்நிலையில், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட வருங்கால வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை பாடத் திட்டங்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘பள்ளிப் புத்தகத்தில் தேர்தல் அறிவை வளர்க்கும் பாடங்களைச் சேர்த்தால் சிறந்த பயன் கிடைக்கும். எனவே, தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறை குறித்த புத்தகத்தை தயாரித்துத் தருமாறு என்சிஇஆர்டி-யிடம் கேட்டுக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்

இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார். அதில், ‘தேசிய பள்ளி பாடத் திட்டங்களை தயாரிக்கும் என்சிஇஆர்டி-யுடன், தேர்தல் ஆணையம் தெரிவித்த யோசனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் புதிய கல்விக் கொள்கையை மேற்கொள்வது தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, புதிய பாடத் திட்டம் தயாரிக்கும்போது தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்’ என பதிலளித்திருந்தார்.

ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி மத்திய அரசுக்கு இது தொடர்பாக மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளி மட்டத்திலிருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும். எனவே, இடைக்கால ஏற்பாடாக, தேர்தல் குறித்த பாடப் புத்தகத்தை உடனடியாக தயாரித்து வழங்க வேண்டும்’ என வலியுறுத்திள்ளார்.

பள்ளிகள் உதவியுடன் தேர்தல் அறிவை மாணவர்களுக்குப் புகட்டும்வகையிலான சிறப்புத் திட்டத்தை, தேர்தல் நிபுணர் குழு ஜனவரி மாதம் தொடங்கியது. அதன்படி, 5,000 தேர்தல் பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் 15 - 17 வயதுடைய மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...